தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மே 10-ம் தேதி முதல் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரலாம் என அறிவித்திருந்தனர்.

திருச்சியில் கொரோனா நோய் தொற்று அதிகமானதை தொடர்ந்து மே 17ஆம் தேதி இன்று முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை திருச்சி மேலப்புலிவார் ரோடு பகுதியில் காந்தி மார்க்கெட் இடம் மாற்றப்பட்டு காய்கறிகள் விற்பனை செய்ய ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் காய்கறிகள் வாங்குவதற்காக சமூக இடைவெளியின்றி கொரோனாவே மூச்சு விட திணறும் வகையில் கூட்டம் கூடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *