கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சமீபத்தில் கையில் எடுக்கப்பட்ட முயற்சி “வார் ரூம்”. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டதின் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த கொரோனா கட்டளை மையம் (Unified command centre) தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தற்போது கொரோனா பாதித்த நபர்கள் மருத்துவமனையில் படுக்கை வசதி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான https://ucc.uhcitp.in/publicbedrequest என்ற இணையதளம் தமிழக அரசின் ‘Covid War Room’ சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளப்பக்கத்தில் சென்று, நோயாளியின் பெயர், விவரம், அறிகுறிகள், நோயில் தன்மை, பரிசோதனை முடிவுகள் போன்ற விவரங்களை எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும். எந்த மாவட்டம், எந்த வகையான படுக்கை வேண்டும், அரசு மருத்துவமனையில் வேண்டுமா அல்லது தனியார் மருத்துவனையா போன்ற தகவல்களும் கேட்கப்படும். நமக்கு தேவையான விருப்பத்தை பதிவு செய்ய வேண்டும். மேலும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து Submit கொடுத்தால் படுக்கை வசதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *