ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளி மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வரம் நகரப் பகுதிகளில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி டாஸ்மாக் கடைகள் எதுவும் செயல்படாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் அதனை சாதகமாக பயன்படுத்தி ஒரு சிலர் சட்டவிரோதமாக கள்ள மார்க்கெட்டில் மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்கப்பட்டு அதனை மதுபிரியர்கள் வாங்கி குடித்து இராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு இடையூரை ஏற்படுத்தி வருவதாக தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது.

இதையடுத்து ராமேஸ்வரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு பேரில் போலீசார் தீவிர ரோந்து பணி ஈடுப்பட்டபோது ராமேஸ்வரம் மீன் பிடித்துறைமுக பகுதியில் சட்ட விரோதமாக

மது பாட்டில்களை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்க முற்பட்டபோது போலீசார் விரைந்து சென்று நான்கு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு சொகுசுக்கார், ஆட்டோ ,315 மது பாட்டில்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்