திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவங்கோட்டை சேர்ந்தவர் டிரைவராக பணிபுரிந்து வருபவர் கோபு வயது 29, இவருக்கு கௌதமி என்ற மனைவியும், கோகுல கிருஷ்ணன் 13, தமிழ் அழகு கண்ணா 5, தமிழ் அழகி ஒன்றரை வயது என இரண்டு மகன்களும், ஒரு மகள் உள்ளனர்.இந்த நிலையில் கவுதமி மூத்த மகன் கோகுல கிருஷ்ணாவை வீட்டில் விட்டுவிட்டு அவரது சகோதரி முத்துலட்சுமியுடன் நேற்று இரவு 7.00 மணிக்கு சமயபுரம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். முடி மண்டபம் அருகே கௌதமி அவரது சகோதரி முத்துலட்சுமியிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு கூறி அங்கிருந்து சென்றுள்ளார். குழந்தையும் அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்ததால் முத்துலட்சுமியும் அந்த பகுதியிலே அமர்ந்திருந்துள்ளார்.

பின்னர் குளித்துவிட்டு வந்த போது குழந்தை காணாத கண்டு அதிர்ச்சி அடைந்து அவரது சகோதரி முத்துலட்சுமி இடம் கேட்டுள்ளார். அவரும் அதிர்ச்சி அடைந்து இருவரும் அருகில் இருந்தவரிடம் விசாரித்தப்போது ஒரு மூதாட்டி குழந்தை ஒன்றை தூக்கி சென்றதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கௌதமி சமயபுரம் காவல் நிலையத்தில் தனது குழந்தை காணவில்லை அங்கு உள்ள பக்தர்களிடம் விசாரித்த போது மூதாட்டி குழந்தையை தூக்கி சென்றதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர் அளித்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் சாந்தி உள்ளிட்ட காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது குழந்தையுடன் அந்த மூதாட்டி இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் வழியாக செல்வது தெரியவந்ததை அடுத்து மூதாட்டியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தேடிய போது அங்கு மூதாட்டி குழந்தையுடன் நிற்பதை கண்ட காவல் ஆய்வாளர் சாந்தி உடனே அந்த மூதாட்டியை கைது செய்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த மூதாட்டி எந்த ஊர் என்று விசாரணை செய்ததில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அய்யம்பேட்டை , துளசியா புரத்தைச் சேர்ந்த நீலாவதி வயது 50 என்பது தெரியவந்தது. இவர் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவரா? யாருக்காக கடத்தினார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்தில் சமயபுரம் போலீசார் பிடித்தது பொதுமக்களிடையே பெரும் வரவேறப்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *