கொரோனா தொற்று 3வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபட தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.




இந்நிலையில் திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஆடு, கோழிகளை காணிக்கைகளை செலுத்தும் இடத்தின் அருகே இன்று காலை 3 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து உஷ்! உஷ்! என்று சீறீயது. இதில் பீதி அடைந்த பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர் இதுகுறித்து அங்கிருந்தவர்கள் சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களைப் பார்த்து படமெடுத்து ஆடிய நல்ல பாம்பினைப் லாவகமாக பிடித்தனர்.
