குழந்தைகள் பொதுமக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலகம் முன்பு நடைபெற்றது. திருச்சி மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை நிலை அலுவலர் நாகவிஜயன், சிறப்பு நிலை அலுவலர் முருகவேல், முருகானந்தன், பால்ராஜ் ஆகியோர் முன்னிலையில் தன்னார்வலரும் முன்னாள் ரயில்வே ஊழியருமான சீனிவாச பிரசாத் அவர்களின் 28 ம் ஆண்டு வாகன விழிப்புணர்வு தொடக்க நிகழ்வும் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் பல்வேறு சமூக நலன் அமைப்புகளின் நிர்வாகிகள் மனித விடியல் மோகன், ஓயிட் ரோஸ் சங்கர், மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ், சமூக சேவகர் பொன் குணசீலன், மக்கள் நல சங்க நிர்வாகி மோகன்ராம், சமூக ஆர்வலர் எழில் ஏழுமலை சாலை பயனீட்டாளர் நல அமைப்பு அய்யாரப்பன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகராட்சிப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்கள், காய் கனி வணிக வளாகம் முன்பு தீப ஒளி திருநாளில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்தும், தீ தடுப்பு குறித்தும், தீ விபத்தில் பாதிக்கப்பட்டால் அவர்களை மீட்பது குறித்தும், முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் விழிப்புணர்வு துண்டறிக்கை பொதுமக்கள் பேருந்து பயணிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர் சீனிவாச பிரசாத் அவர்கள் திருச்சி மாவட்ட நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தனது 2 சக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயணத்தை தொடங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *