நடிகர் அஜித் குமார் நடித்து வெளியான “வலிமை” படம் உலகம் முழுவதும் மாபெரும் வசூலை செய்து வருகிறது. குடும்ப ரசிகர்கள் மத்தியில் சிறந்த விமர்சனத்தையும் வலிமை பெற்றுள்ளது.

அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி AK 61 படத்திற்காக இணைந்துள்ளது.

இப்படத்தின் ப்ரீ போட்டோஷூட் புகைப்படம் ஒன்று தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தோற்றம் அடுத்த படத்திற்கான கெட்டப் எனவும் கூறப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *