சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை திருச்சியை நோக்கி வந்த சிகப்பு கலர் கார் ஒன்று திடீரென சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் சிறுகனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாலை விபத்துக்குறித்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டதில் திருச்சி தினமணி நாளிதழின் நிருபர் கோபி (வயது 37) சொந்த ஊர் திருச்செங்கோடு என்பதும் திருமணம் ஆகி இரு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

 

மேலும் காரை ஓட்டி வந்தவர் செந்தில் குமார் என்பது தெரியவந்துள்ளது. கார் விபத்தில் பலியான இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *