மயிலாடுதுறை அருகே சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்து போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் கீழத் தெருவை சேர்ந்தவர் குமார் இவரது மகன் பாலமுருகன் (22) டிரைவர் வேலை பார்த்து வருகிறார்.. இவர் மயிலாடுதுறை நர்சிங் கல்லூரியில் பயின்ற 17 வயது சிறுமியை கடந்த சில மாதங்களாக பின் தொடர்ந்து வந்துள்ளார். கடந்த 8ஆம் தேதி மயிலாடுதுறைக்கு வந்த சிறுமி வீடு திரும்பவில்லை எங்கு தேடியும் கிடைக்காததை அடுத்து அவரது பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை பாலமுருகன் என்ற வாலிபர் கடத்திச் சென்றதாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இந்நிலையில் பாலமுருகன் அவரது உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு சென்று வாலிபர் பாலமுருகன் கைது செய்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீஸ் விசாரணையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காதல் வயப்படுத்தி திருமணம் செய்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாலமுருகன் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்