கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியிலுள்ள கல்லூரியில் பிபிஏ பயிலும் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே கல்லூரியில் படிக்கும் சீனியர்- ஜூனியர் மாணவர்களுக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன் பிரச்சினையின் காரணமாக அடிதடி நடந்துள்ளதாக தெரிகிறது. இதில் கேரளா மாநிலம் ஒத்தப்பாலம் பகுதியை சேர்ந்த மாணவனை 10க்கு மேற்பட்ட மாணவர்கள் தாக்கி அரை நிர்வாணமாக சாலையில் அடித்து இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்டபோது சீனியர்ன்னா பெரிய இவனா நீ! இதுக்குமேலயும் அடங்கவில்லை என்றால் ஜட்டி இல்லாமல் சுத்தவிடுவோம் என ஜூனியர் மாணவர்கள் மிரட்டி அடித்தனர். பின்னர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய அடுத்து குனியமுத்தூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அடி வாங்கிய மாணவனின் ஐபோனை பறித்து சென்றனர். இந்த அடிதடிக்கு காரணம் காதல் விவகாரமா? அல்லது ரேகிங்கா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *