பெரம்பலுார் மாவட்டம், பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகன் பாலமுருகன்,38, இவரது தந்தை வேலு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பும், தாய் மூக்காயி கடந்த 10 மாதங்களுக்கு முன்பும் இறந்தனர். பெற்றோர் இறந்துவிட்டதால் பாலமுருகனுக்கு திருமணமாகவில்லை. இதனால், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட பாலமுருகன் கடந்த சில மாதங்களாக, தனது தாய் புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்று அங்கு அமர்ந்து தனக்குத்தானே பேசி வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவு மூக்காயி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி அவரது உடலை வெளியே எடுத்து, வீட்டிற்கு கொண்டு வந்து பத்திரப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், பாலமுருகனின் உறவினரான சுமதி என்பவர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் அவருக்கு சாப்பாடு கொடுக்க வந்தார். அப்போது, வீட்டில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது, மூக்காயின் உடல் அழுகிய நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர், இது குறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த குன்னம் எஸ்.ஐ., கார்த்திகாயினி, மூக்காயி சடலத்தை மீட்டு, பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனைக்குப்பின் மீண்டும் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்