இசைஞானி இளையராஜாவின் மகன் பிரபல திரைப்பட பின்னணி இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற உள்ளது இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் பிரபல திரைப்பட முன்னணி நடன இயக்குனர் கலா மாஸ்டர், திரைப்பட இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

திருச்சி மாநகரில் முதன் முறையாக ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் 3000, அருண் ஈவன்ட், கலா விஷ்மயா மற்றும் எல்சிஏ என்டர்டெயின்மென்ட் இணைந்து நடத்தும் லலிதா ஜுவல்லரி வழங்கும் பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜா அவர்களின் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி அடுத்த மாதம் 24 ஆம் தேதி மாலை 6:00 மணி அளவில் திருச்சி மொராய்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் உருவான பாடல்கள் மற்றும் கார்த்திக் ராஜா அவர்கள் இசையில் உருவான பாடல்களை இசைக்குழுவினர் இசைக்க உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியை சிறப்பூட்டும் வகையில் நடிகை குஷ்பு தொகுத்து வழங்குகிறார். நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு மற்றும் சதீஷ் ஆகியோர் நகைச்சுவை மூலம் நமது திருச்சி மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க உள்ளனர். மேலும் பின்னணிப் பாடகர்கள் ஹரிஹரன், உன்னி மேனன், சாதனா சர்கம், ரீட்டா, ஸ்ரீராம், சிவாங்கி, தான்யாஸ்ரீ உள்ளிட்டோர் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இசை விருந்து அளிக்க உள்ளனர்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் “பொன்மாலைப் பொழுது” இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை PayTM insider மற்றும் Bookmyshow ஆன்லைன் செயல்களில் பெற்றுக் கொள்ளலாம். இசை நிகழ்ச்சி டிக்கெட்டுகள் ரூபாய் 500 முதல் 10 ஆயிரம் வரை விலைகளில் விற்பனையாகிறது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் 3000 ஆளுநர் ஜெரால்ட், அருண் ஈவன்ட்ஸ் அருண் , கலா விஷ்மயா கலா மாஸ்டர் மற்றும் எல்சிஏ என்டர்டெயின்மென்ட் ரபீக் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *