திருச்சி மாவட்ட உக்கடை அரியமங்கலம் பகுதியில் ரஹமத் பள்ளிவாசல் மதரசாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,

இதில் திருச்சி மாவட்ட பார்வையற்றோர் சங்கத் தலைவர் குமார்,பூக்கடைசாகுல்,அபுதாகீர்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்,சிறப்பு விருந்தினர்களாக ரஹ்மத் பள்ளிவாசல் முத்தவல்லி எஸ்எஸ் ஷாஜகான், தந்தை பெரியார் கல்லூரி பேராசிரியர் ஹஜ் மொய்தீன், சுமைதாங்கி இதழ் ஆசிரியர் எகியா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்,

சிறப்பு விருந்தினர்கள் கோட்டத் தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ்,கலந்து கொண்டு செவித்திறன் இழந்த கண் பார்வையற்றோர் மூளை வளர்ச்சி குன்றிய பேச்சு திறன் அற்ற ஆகிய 100 நபர்களுக்கு அவர்களுக்குரிய உபகரணங்கள் வழங்கினர். இதில் மக்கள் சேவை துணைச் செயலாளர் நவாஸ்கான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்,மாற்றுத்திறனாளியை சேர்ந்த ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்றதுசென்றனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்