திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு காளைமுட்டி படுகாயம் அடைந்த 28 வயது இளைஞர் ஒருவர் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டார். இவருக்கு வலது பக்க மார்பு பகுதியில் பெரிய காயத்துடன் விலா எலும்புகள் உடைந்து பாரடாக்ஸிகள் பிரிதிங் என்ற நிலையில் இருப்பதை மருத்துவ குழுவினர் கண்டறிந்தனர். வலது நுரையீரலில் 8 சென்டிமீட்டர் அளவு சிதைவு ஏற்பட்டிருந்தது. மேலும் மூச்சுக்காற்று கசிவு மற்றும் ரத்தக் கசிவு மேலும் 4, 5, 6 ,7 ஆகிய விலா எலும்புகள் முறிந்த நிலையில் இருப்பதை டாக்டர் ஸ்டீபன் கண்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து இருதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அரவிந்த் கல்யாணசுந்தரம், ஸ்ரீகாந்த் பூர்ணிமா மயக்கவியல் நிபுணர்கள் ரோகினி சரவணன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் மூச்சுக்காற்று கசிவு இரத்த கசிவு விலா எலும்புகள் முறிவு ஆகியவற்றை சரி செய்து நுரையீரல் மேல்பகுதியில் உள்ள மென்மையான திசுக்களை சரி செய்தனர். பின்னர் அவர் உடல் நலம் தேறி வீடு திரும்பினார்.
மேலும் அடுத்த நாள் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் படுகாயம் அடைந்த 34 வயது இளைஞனும் திருச்சி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் .இவருக்கு இடது பக்க மார்பு பகுதி மற்றும் வயிற்றுப் பகுதியில் பெரிய காயம் இருந்தது.அதைத்தொடர்ந்து முதலில் லா ப்ரோ டோ மி அறுவை சிகிச்சை செய்தனர். மேலும் வாட்ஸ் எனக் கூறப்படும் வீடியோ அசிஸ்டட் ஜுராசிக் சர்ஜரி எனப்படும் நுண்துளை மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த நவீன சிகிச்சை வசதி மூலம் பல நோயாளிகளுக்கு விபத்து நாள் ஏற்படும் நுரையீரல் பகுதியை அகற்றுதல் புற்று நோய்க்கான நுரையீரல் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.இது தொடர்பாக மருத்துவ நிர்வாகி சிவம், மூத்த பொது மேலாளர் சாமுவேல் ஆகியோர்கூறும்போது டெல்டா மாவட்டத்தில் என்ஏ பி ஹெச் அங்கீகாரம் பெற்ற ஒரே பல் மருத்துவமனைஅப்போலோ ஆகும். இங்கு உலக தரத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது .இந்த டாக்டர்களை அவர்கள் பாராட்டினர் இதில் பொது மேலாளர் சங்கீத் ராமமூர்த்தி விற்பனை பிரிவு மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.