தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதன் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் மகேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது, (tamilmuzhakkam.com) கூட்டத்தில் மாநில செயலாளர் நாகராஜன் வரவேற்புரையாற்றிட மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் மாநில பொருளாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கடந்த 01.04.2003-க்குப் பிறகு தமிழக அரசின் கீழ் பணியமர்த்தப் பட்டவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட கோரியும், அகவிலைப்படி உயர்வை (D.A) ஒன்றிய அரசு அறிவிக்கின்ற அதே நாள் முதல் தமிழக அரசும் அறிவித்து கிஞ்சித்தும் குறைக்காமல் வழங்கிட கோரியும், (tamilmuzhakkam.com) கால வரையறையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை (Earned Leave) உடனடியாக விடுவித்து ஒப்படைப்பு செய்து பணமாக்கிக் கொள்ள ஆணை பிறப்பித்திட கோரியும், 6 முதல் 10 வகுப்பு வரை கற்றல்-கற்பித்தல் சிறப்புற 2011-12 ஆம் கல்வி ஆண்டில் வழங்கியதைப் போல 6 – 8 வகுப்புகளுக்கு 3 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும்,

(tamilmuzhakkam.com) 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு ஒரு பாடத்திற்கு ஓர் பட்டதாரி ஆசிரியர் என்ற அளவில் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடகளும் ஆக மொத்தம் குறைந்தது 8 பட்டதாரி ஆசிரியப் பணியிடங்களை உருவாக்கி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. (tamilmuzhakkam.com) இக்கூட்டத்தில் மாநில சிறப்புத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *