திருச்சி லால்குடி கீழவீதி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டும் உச்சநீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி லால்குடி தெற்கு வீதி அபிஷேகபுரம் பகுதியில் நடத்த அனுமதி கோரி பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத் தலைவர் தன்ராஜ் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சிவராசிடம் மனு அளித்த பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவையினர்.

அதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் கூறுகையில்:-

திருச்சி லால்குடி கீழவீதி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி கடந்த 70 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி கோரி பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவையினர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்ற உத்தரவுபடியும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் படியும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்துள்ளார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், அரியலூர் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600க்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் போட்டியில் பங்கு பெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்கு ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்கள் 600 பேர் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்தார். அருகில் மாநில துணைத் தலைவர் காத்தான், மாநில செயலாளர் திருச்சி சிவா, மாநில துணை செயலாளர் கள்ளக்குடி காமராஜ், திருச்சி மத்திய மாவட்ட தலைவர் புள்ளம்பாடி தர்மன், மாநில இளைஞர் அணி தலைவர் சண்முகம் மற்றும் மாநில பொருளாளர் தக்காளி சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *