தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 28ஆம் தேதி அதாவது இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் 7,382 பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடைபெறுகிறது. இதில் 81 விளையாட்டு ஒதுக்கீடு, 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் அடங்கும். மார்ச் 30ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத தகுதி உடையோர் மற்றும் விருப்பமுள்ளவர்கள் இன்றுக்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *