தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்க்கு பொதுச்செயலாளர் மனித விடியல் மோகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைவர் அசோகன் சிறப்புரையாற்றினார். பொதுக்குழுவில் நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ரமேஷ், புதுராஜா, செல்லராஜ், ரஜினிகாந்த், பாக்கிய லெஷ்மி, ராணி, சக்திவேல் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:-

தீபாவளி பண்டிகை காலங்களில், தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்கள் ஆர்டரின் பேரில், தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகளுக்கு, உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் பெற்று, விற்பனை செய்ய வேண்டும். தரமான, கலப்படம் இல்லாத மூலப்பொருட்களைக் கொண்டு, சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.மேலும் தரமான நெய், எண்ணெய் பயன்படுத்த வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. என்ற விழிப்புணர்வுடன் திடிர் ஆய்வினை உணவு பாதுகாப்பு துறை மேற்கொள்ள வேண்டும்,

 தமிழகத்தில் பொட்டலமிட்ட உணவு பொருட்களில் பேக்கிங் லைசன்சஸ் கண்டிப்பாக பெறவேண்டும் மேலும் பல்வேறு தொற்று இல்லா நோய்யின் தாக்கத்திற்கு முக்கிய காரணியாக இருப்பது அதிக சர்க்கரை,அதிக உப்பு,அதிக எண்ணெய் என்ற அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையில்சார்பில் Less Salt,Less sugar,Less Oil என்ற அடிப்படையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.இந் நிலையில் நுகர்வோர் நலன் காக்க பேக்கிங் லேபிளில் நுகர்வோர் எளிதில் அடையாளம் காணும் வகையில் அதிக சர்க்கரை, அதிக உப்பு பொட்டல உணவு பொருட்களில் கலக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை மக்களிடம் தெரிவிக்கும் வகையில் தனி அடையாள குறியீடு மூலம் தெரிக்க வேண்டும் எனவும் இவற்றை முறைப்படுத்தி எடையளவு கட்டுப்பட்டுதுறையும்,உணவு பாதுகாப்பு துறையும் புதிய விதியை உருக்கி நடைமுறைபடுத்த வேண்டுகிறோம்.

மேலும் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு என்பது நுகர்வோரை கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர் மேலும் தமிழ அரசு மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய கோருவதுடன்.நுகர்வோர் மின் பயனீடு கணக்கை ஒவ்வொரு மாதமும் கணக்கீடு செய்ய கேட்டுக்கொள்கிறது இதன் மூலம் பெறும் அளவு மின் நுகர்வோர்கள்,பயனடைவர்கள் .எனவே மாதாந்திர மின் கணக்கீட்டை நடைமுறை படுத்த தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *