நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் உள்ள எதுமலை பிரிவு ரோட்டில் தற்போது முசிறி,துறையூர், மண்ணச்சநல்லூர், சமயபுரம், உப்பிலியாபுரம்,பாலகிருஷ்ணம்பட்டி உள்ளிட்ட நகராட்சி,பேரூராட்சிகளில் போட்டி இடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து இருந்தனர்.

இதில் உதயநிதி ஸ்டாலின் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றியது :

 

கொரோனோ இரண்டாவது அலையின் போது தான் முதல்வராக தலைவர் பதவி ஏற்றார் – 8 மாதத்தில் மட்டும் 9 கோடி ஊசிகளைப் போட்டுள்ளோம். மக்களைப்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக 50 லட்சம் மக்கள் பலன் அடைந்துள்ளனர். சாலை விபத்து என்றால் உடனடியாக 48 மணி நேரத்திற்கு அவர்கள் இலவசமாக சிகிச்சை அளிக்கும் திட்டம். திருச்சி என்றாலே இது திமுகவின் கோட்டை – அண்ணன் கே.என் நேருவின் கோட்டை. சரியாக இன்னும் 10 நாட்கள் மட்டும் தான் உள்ளது – ஏதோ வந்தோம் …போனோம் இல்லை என்று இல்லாமல் ஒவ்வொரு தெருவாக சென்று ஒவ்வொருவரும் 5 வாக்குகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு களப்பணியாற்ற வேண்டும்.

இந்த தீவிர பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும் – கூட்டுறவில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார் அதேபோல் செய்தார். வட இந்தியாவில் மூத்த பத்திரிக்கை போட்டுள்ளனர் தலைவர் தான் நாட்டிலேயே மிகச் சிறந்த முதல்வர் என்று.இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக ஆக்குவேன் என்று தலைவர் தினமும் பணியாற்றி வருகிறார். சட்டமன்ற தேர்தல் எப்படி மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கும் அதேபோல் 100% நகர்புற தேர்தலில் நீங்கள் வெற்றியை ஏற்படுத்தித் தர வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உறுதி கூறி உள்ளோம் … கண்டிப்பாக அதனை நிறைவேற்றுவோம் நீட் விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அனுப்பிய சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவி அவர்களே – இது கடந்த ஆட்சியை போல் அடிமை ஆட்சி அல்ல,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி – திருச்சியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேசினார். அருகில் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.