நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையில் அவரது ரசிகர்கள் ஆங்காங்கே பல்வேறு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மதுரை மத்திய தொகுதியில் 2024ல் முதல் மாநாடு, 2026 ல் முதலமைச்சராக என மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமாக உள்ள நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் காத்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் சுயேட்சையாக களம் காண்கின்றனர்.அதன்படி உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களிலும் விஜய் ரசிகர்கள் போட்டியிடுகின்றனர். சில இடங்களில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அடித்து சொல்லப்படுகிறது.

விஜய் ரசிகர்களும் பெருத்த உற்சாகம் அடைந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் 2024ல் முதல் மாநாடு, 2026 ல் முதலமைச்சராக களம் காண தயாராகுங்கள் தளபதி சொந்தங்களே என்ற வாசகங்கள்அச்சிடப்பட்டுள்ளது. 2021ல் உள்ளாட்சி, 2026ல் நல்லாட்சி என்றும், பல அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் விஜயின் படம் இடம்பெறற போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *