தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதார பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அருகில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், இயக்குனர் செல்வவிநாயகம், மேயர் அன்பழகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி –

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சி 63 நகராட்சிகளில் புதிதாக 708 நகர்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அது அமைப்பது தொடர்பாகவும், மேலும் 25 ஆரம்பர மற்றும் 25 நகர்புற சுகாதர மையங்கள் அமைப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளோம்.தமிழகத்தில் 32 இடங்களில் மருந்து கிடங்குகள் உள்ளது புதிய 5 மருந்து கிடங்குகள் கட்டவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.1250 இடங்களில் வருமுன் காப்போம் திட்ட முகாம்கள் இந்தாண்டு 800 இடங்களில் நடத்தப்பட உள்ளது. மருத்துவ துறையில் மொத்தமாக 4308 காலி பணியிடங்கள் இரண்டு மாத காலத்திற்குள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். நியூரோ அறுவை சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமபையில் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு சென்றுள்ளனர்.

தழகத்தில் மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக இரண்டு மருத்துவ சங்கங்கள் வெவ்வேறு விதமான கோரிக்கையை முன் வைத்தனர் – இது தொடர்பாக 18 முறை இரண்டு சங்கங்களையும் அழைத்து பேசி உள்ளோம்,விரைவில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு அதற்கான முடிவு எட்டப்படும்.தமிழ்நாட்டில் 1303 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு என்கிற மாயத்தோற்றத்தை உருவாக்கினார்கள். ஆனால் அது தவறு. மருந்து தட்டுப்பாடு இல்லை என்கிற நிலை தான் உள்ளது. கொரொனா தடுப்பூசி 6.90 லட்சம் உள்ளது. ஆனால் மக்கள் தடுப்பூசி செலுத்த வரவில்லை. தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். காஞ்சிபுரத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் கட்டப்பட்டு வருகிறது. மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் நிறுவனத்திற்கு இணையாக கட்டி வருகிறோம் ஒரு ஆண்டுக்குள் அது பயன்பாட்டிற்கு வரும்.தமிழ்நாட்டில் 2127 ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அதில் 427 தான் மேம்படுத்தப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதில் தான் 30 படுக்கை வசதிகள் இருக்கும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 30 படுக்கை வசதிகள் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்