தமிழக முழுவதும் பல்வேறு வயது நருக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கான முக்கியத்துவம் மற்றும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பல பிரிவுகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது,இந்த போட்டியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 15 முதல் 35 வயது உள்ளவர்கள் வரை போட்டியில் கலந்து கொள்ளலாம் ,இந்த போட்டியில் இறகு பந்து, தடகளம், சிலம்பம், உள்ளிட்ட போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது, இந்த போட்டிகளை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் போட்டிகளை தொடங்கி வைத்து இறகுபந்து விளையாடி அசத்தினார்…
இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆண்டனி ஜோயல் பிரபு, விளையாட்டு விடுதி மேலாளர் ஞானா சுகந்தி,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…