திருச்சி,தென்னூர் சிவன் கோவில் அருகே உள்ள அரசமரத்தடி பேருந்து நிறுத்தத்திற்கு முன் 60-க்கும் மேற்பட்ட பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த அரசு பேருந்து ஒன்று பாதாள சாக்கடை‌ அமைக்கும் பணிக்காக சாலையின் நடுவே தோண்டப்பட்டு சரியாக மூடப்படாத பள்ளத்தில் பேருந்தின் பின் சக்கரம் மாட்டிக் கொண்டு சாய்ந்த நிலையில் சாலையின் நடுவே அபாயகரமாக நின்றது.

மேலும் மழைக்காலமாக இருப்பதாலும், பள்ளத்தின் அருகே நடுநிலைப்பள்ளி இருப்பதாலும் இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு கவனம் செலுத்தி உடனடியாக சரிசெய்து கொடுத்திட வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். என நமது “தமிழ் முழக்கம்” ஆன்லைன் பக்கத்தில் படத்துடன் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை ஜிபி இயந்திரத்தின் உதவியுடன் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *