கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டம் சலடஹில் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் மடிவலபா படிகர் வயது 18 இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அதே கிராமத்தைச் சேர்ந்த டவால்பி பந்தகிசாப் என்ற 18வயது இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்தார்.

இந்த இளம் காதலர்களின் காதல் விஷயம் டவால்பி குடும்பத்திற்கு தெரியவந்தது. பசவராஜ் தலித் என்பதாலும், வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் டவால்பி குடும்பத்தினர் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பசவராஜிடம் தனது பெண்ணை காதலிப்பதை கைவிட்டுவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனைப் பொருட்படுத்தாமல் பசவராஜூம், டவால்பி தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த கிராமத்தில் உள்ள வயல்வெளியில் காதலர்கள் பசவராஜூம், டவால்பி பேசிக்கொண்டிருந்ததை உறவினர்கள் பார்த்து அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். ஆத்திரமடைந்த டவால்பியின் தந்தை மற்றும் சகோதரர்கள் உறவினர்கள் இருவரையும் பிடித்து கட்டி வைத்து அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து காதலர்கள் இருவரது தலையிலும் கல்லைப் போட்டு பசவராஜ் தாயின் கண் முன்னே கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பசவராஜ் மற்றும் டவால்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளான பந்தகிசாப்பின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள் என 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *