பாரம்பரியமாக திமுகவில் பல ஆண்டுகளாக இருந்து வருபவரும், திமுகவின் பிரபல பேச்சாளருமான திமுக எம்.பி திருச்சி சிவா இவரது மகன் சூர்யா சிவா

திமுகவில் தனக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என அதிருப்தியில் இருந்து வந்த திமுகவின் நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் சேரமுடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் சூர்யா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து அவர் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு தமிழக பாஜகவின் OBC அணியின் மாநில பொதுச் செயலாளர் பொருப்பு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக பாஜகவின் OBC அணியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா, “தமிழகத்தில் பாஜக ஆளும் கட்சியாக வரும் என்ற நம்பிக்கையில் பாஜகவின் இணைந்துள்ளேன். திமுகவில் உரிய அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் அந்த கட்சியில் இருந்து விலகி நான் பாஜகவில் இணைத்துள்ளேன். பதவி வேண்டும் என்று பாஜகவுக்கு நான் வரவில்லை, ஆனால் உழைப்புக்கான அங்கீகாரமாக தமிழக பாஜகவின் OBC அணியின் மாநில பொதுச் செயலாளர் பதவியை தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை எனக்கு கொடுத்துள்ளார். நான் பாஜகவில் இணைந்ததை எனது தந்தை ஏற்றுக்கொள்ளவிட்டால் பரவயில்லை, பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்றுக் கொண்டு விட்டார்” இனி நான் பாஜகவின் வெற்றிக்காக கடுமையாக உழைப்பேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *