மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவத்திற்கு காரணமான திமுக பிரமுகரை கட்சியை விட்டு நீக்குவதாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரி ஒன்று முழு ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் அங்கு இரு சக்கர வாகனங்களில் வந்த 4-பேர் கொண்ட மர்ம கும்பல் பேக்கரிகடையை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு அசோக் என்ற நபரையும் மற்றும் மூவரையும் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் அசோக் மற்றும் கும்பல் வாடிப்பட்டி திமுக செயலாளர் பிரகாசம் என்பவரின் தூண்டுதலின் பேரில் பேக்கரியில் தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது.இந்நிலையில் பிரகாசத்தை கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைப்பதாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.