திருச்சி சிந்தாமனி அண்ணா சிலை அருகே இன்று காலை மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலையை வரவேற்க காத்திருந்த திருச்சி மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பிரதான சாலையில் பட்டாசுகளை வைக்க முயற்சித்த போது காவல் துறையினர் போக்குவரத்துக்கு இடையூறாக பிரதான சாலையில் வெடி வைக்க வேண்டாம் என தடுத்து நிறுத்தினர். அப்போது காவல்துறையினருக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் தடுத்தும் பாஜக வினர் சாலையின் நடுவே வெடி வெடித்தனர் இதனால் காவல்துறையினருக்கும் திருச்சி மாவட்ட பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது – மேலும் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர் அதனடிப்படையில் கொரோனோ ஊரடுங்கு விதிமுறைகளை பின்பற்றாதது,பொது இடங்களில் பங்கம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருச்சி பா.ஜ.க மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட 10-க்கும் அதிகமானோர் மீது திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்