திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 129 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் தொடர்புடைய 181 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 192 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்த 32 நபர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது அதேபோல் இந்த ஆண்டு இன்று வரை மொத்தம் 18 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் அவர்களிடம் இருந்து 54 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது மூன்று நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.

மேலும்  ராம்ஜி நகர் பகுதியில் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்து வந்தவர்களை கண்டறிந்து கடந்த 2022 ஆம் ஆண்டு 9 பேரையும் இந்த ஆண்டு இரண்டு நபர்களையும் என மொத்தம் 11 பேர் குண்டாஸில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கஞ்சா வழக்கில் தொடர்புடைய இரண்டு மிக முக்கிய குற்றவாளிகள் ஆன மதன் மற்றும் கமல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் கஞ்சா விற்பனை தொடர்பான புகார்கள் இருந்தால் 9688442550, 9498181235 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தற்போது கஞ்சா விற்பனை வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு அரசிடம் இருந்து உதவிகள் பெற்றுத் தரப்படும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்