திருவானைக்காவல் டிரங்க் ரோடு பகுதியில் நடந்து சென்ற முதியவரிடம் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 2000/ ரூபாய் பணத்தை பறித்து சென்றதாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கும்பக்குடி பகுதியை சேர்ந்த ரவுடி வசந்த் என்பது தெரியவந்தது.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த 2020ஆம் ஆண்டு திம்மராயசமுத்திரத்தில் நடந்த கோவில் திருவிழாவின்போது ஒருவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கிலும், அதேபோல் 2021-ம் ஆண்டு மற்றொரு கோவில் திருவிழாவின் போது கத்தியை காட்டி மிரட்டி வீட்டின் கூரை மற்றும் வாகனத்தை சேதப்படுத்திய வழக்கு உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. மேலும் கும்பக்குடி வசந்தா தொடர்ந்து அடிதடி சம்பவங்களில் ஈடுபடுவதும் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பவர் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததால். திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அவர்கள் ரவுடி வசந்தை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் ரவுடி வசந்த் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்