திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சிவயல் புத்தூரை சேர்ந்தவர் மாணவி வித்யாலட்சுமி வயது (19). இவர் தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் – இந்த நிலையில் துவாக்குடி பிளக் தியேட்டரை அடுத்த மணியம்மை நகர் சாலையில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி படித்து வந்த மாணவியை கடந்த ஒரு மாத காலமாக பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் கடந்த 11ஆம் தேதி மாணவியிடம் காதலை தெரிவித்ததாகவும்,அதை மறுத்த மாணவி, அந்த வாலிபரை செருப்பால் அடித்ததாகவும்,இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து 12ஆம் தேதி தாத்தா வீட்டிற்கு செல்லும் வழியில் மறித்து விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றியதாக மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மேலும் போலீஸாரிடம் மாணவி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார், மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த மூன்று நபர்கள் யார் என்பது குறித்தும், மாணவி ஏதேனும் தவறு செய்து விட்டு அதை மறைப்பதற்காக இதுபோன்று நாடகமாடி வருகிறாரா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை ஈடுபட்டுள்ளனர். மேலும் மாணவி முன்னுக்குப்பின் முரணாக சில தகவல்களை கூறுவதால் காவல்துறையினர் இந்த வழக்கின் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் இந்நிலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீரென திருச்சி திருவரம்பூர் மலைக்கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மறியலை கைவிடுமாறு கூறினர். அதையும் மீறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் திடீரென தடியடியில் ஈடுபட்டு கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்