திருச்சி ஶ்ரீரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய் ஸ்ரீ (வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். அதே ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிஷோர் என்கிற கிரோஷ் என்கிற வாலிபரை காதலித்து வந்துள்ளார் . இந்த நிலையில் வடக்கு சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு பின்புறம் உள்ள மாடியிலிருந்து நேற்று இரவு குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மேற்கொண்டு உள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை நண்பர்கள் உதவியுடன் காதலன் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்..

இதையடுத்து உடலை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து போலீசார் காதலன் மற்றும் காதலனின் கிஷோர் என்கிற கிரோஷ் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது. அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது ? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஸ்ரீரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *