திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் முடி மண்டப வளாக சாலையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் படு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்த நபர் மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சின்னராசு வயது (41) என்பதும், இவரை படுகொலை செய்தவர் மண்ணச்சநல்லூர் சீதேவிமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜா (எ) புல்லட் ராஜா என்பதும் ஏற்கனவே இவர் மீது சமயபுரம் மன்னச்சநல்லூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரவுடி புல்லட் ராஜாவின் மனைவி கிருஷ்ணவேணியுடன் ஆட்டோ ஓட்டுநர் சின்னராசு கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாகவும் இந்நிலையில் புல்லட் ராஜா மனைவியுடன் சமயபுரம் கோவிலில் சாமி கும்பிட ஆட்டோவில் வந்த போது ஆட்டோ ஓட்டுநர் சின்னராசை வழிமறித்து அவரது கழுத்தில் புல்லட் ராஜா கத்தியால் குத்தி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. தற்போது கொலையாளி புல்லட் ராஜாவை டிஎஸ்பி சீதாராமன் தலைமையில் ஒரு தனிப்படையும் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *