திருச்சி மாவட்டம் துறையூர் ஆத்தூர் சாலையில் சுந்தராஜ் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் பழுது நீக்கும் பட்டறை இயங்கி வருகிறது. இவரிடம் சில நாட்களுக்கு முன்பு ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்க விவசாயி பிரசாந்த் என்பவர் தனது டிராக்டர் மற்றும் டிப்பரையினைக்கும் கொக்கி ஒன்றை சரிபார்க்கும் படி கொடுத்து சரி செய்து வாங்கி சென்றுள்ளர். இந்நிலையில் சில நாட்கள் கழித்து பட்டறை உரிமையாளரிடம் தங்களிடம் வாங்கி சென்ற கொக்கி காணாமல் போய்விட்டதாக கூறி உள்ளார். நேற்று அதே பட்டறையில் கோண பாதையை சேர்ந்த பெருமாள் மகன் 32 வயதுள்ள ராமராஜ் என்பவர் அதே கொக்கியை எடுத்து வந்து பட்டறையில் கொடுத்து சரிபார்த்து கொடுக்கும்படி கேட்டு உள்ளார். பட்டறை உரிமையாளர் சுந்தராஜ் நாம் சரி செய்து கொடுத்த கொக்கி போல் இருப்பதை உணர்ந்து இது ரங்கநாதபுரம் பிரசாந்துக்கு சொந்தமானவை என்று நினைத்து அவருக்கு போன் மூலம் தகவல் அளித்துள்ளார். உடனே பிரசாந்த் தனது நண்பர்களுடன் விரைந்து வந்து இந்த கொக்கி உங்களுக்கு எப்படி வந்தது என்று ராமராஜை கேட்டபொழுது அதற்கு முன்னுக்கு பின்னாக பதில் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து ராமராஜை அவனுடைய வீட்டிற்கு அழைத்து சென்று வீட்டை சோதனை செய்தபோது அங்கு ஏராளமான டாக்டர் வண்டியின் உதிரிப்பாகள் இருப்பதை கண்டு விவசாயி அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் சமூக வலைத் தளங்களில் காட்டு தீ போல் பரவியது. இதைத்தொடர்ந்து கோண பாதைக்கு புலிவலம். கரட்டாம்பட்டி. நல்லவன் னிப்பட்டி செங்காட்டுப்பட்டி. கீரம்பூர் . ஆகிய பகுதிகளில் இருந்து டிராக்டர் மற்றும் உதிரி பாகங்களை பறிகொடுத்த விவசாயிகள் கோண பாதை ராமராஜ் வீட்டுக்கு முன் திரண்டனர் இதனை அறிந்த கோண பாதை ஊர் பொதுமக்கள் ராமராஜனை துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். துறையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.