திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவானைக்கோவிலில் உள்ள தெப்பக்குளம் ராம தீர்த்தக்குளம் என்று அழைக்கப்படுகிறது.இந்தக் குளத்தில் காவிரியில் தண்ணீர் வரும்போது நேரடியாக இதில் நீர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளது.42 ஆயிரத்து 350 கன மீட்டர் கொள்ளளவுள்ள இந்த குளத்திற்கு காவிரி ஆற்றிலிருந்து மலட்டாறு வழியாக குளத்திற்கு நீர் நிரப்பும் வகையில் குழாய்கள் மறுசீரமைக்கப்பட்ட இன்று முதல் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.இன்று குளத்தை பார்வையிட்டு அதனை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு இன்று திறந்து வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் திருச்சியில் தற்போது திருவானைக்கோவில் எப்படி சீரமைக்கப்பட்டது அதேபோல ஸ்ரீரங்கம் தெப்பக்குளமும், மலைக்கோட்டை தெப்பக்குளமும் விரைவில் சீரமைக்கப்பட்டு புதிய நீரேற்று நிலையம் தெப்பக்குளத்திற்கு என்று அமைக்கப்படும் என்று கூறினார்.மேலும் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட குளங்களை முழுமையாக செப்பனிட்டு அனைத்து குளங்களிலும் நீரை நிரப்பி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.குறிப்பாக எடமலைப்பட்டி புதூரில் உள்ள நான்குக்கும் மேற்பட்ட குளங்களை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளும், மிளகு பாறை பகுதியில் உள்ள 11 ஏக்கர் பரப்பிலான குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறிய மிளகுபாறை பகுதியில் உள்ள குளத்தை பராமரிப்பு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.குளங்களை செப்பனிடுவதற்கு முக்கிய காரணமே நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காகவே எனவே விரைவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் சீரமைத்து நீர் ஏற்றி பராமரிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *