திருச்சி முத்தரசநல்லூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் இவரின் மகன் சந்தோஷ் குமார் இவர் தனியார் டிராவல்ஸ் ஏஜென்சியில் பணி புரிந்து வருகிறார். இவருக்கும் நாகப்பட்டினம் அந்தண பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 18 பவுன் நகை 2 கிலோ வெள்ளி மற்றும் வீட்டு உபயோக சாமான்களை வழங்கியுள்ளனர். இவர்களுக்கு சர்வேஷ் என்கிற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் வரதட்சனை கேட்டு சந்தோஷ்குமார் நிவேதாவிடம் அடிக்கடி சண்டை விட்டு வந்துள்ளார்.

கடந்த தீபாவளியன்று தங்க சங்கிலி வேண்டும் என கூறி மனைவியை அடித்து துன்புறுத்தினார் இதில் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு. இந்நிலையில் எனக்கு வளைகாப்புக்காக நாகப்பட்டினத்தில் உள்ள எனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் எனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு என்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என கூறி வீட்டைவிட்டு வெளியே துரத்திவிட்டார். திருச்சி ஜியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ‌ எந்தவித நடக்க நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில் எனது கணவருடன் சேர்ந்து வாழ வைக்க கோரி திருச்சி ஐஜி அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் நிவேதா பெற்றோருடன் மனு அளிக்க வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்