கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் சட்டசபையில் ஜெய்ஹிந்த் என்ற சொல்லை சொல்லாமல் உரையை முடித்துள்ளார். இதனை கண்டித்து இன்று திருச்சி இந்து முன்னணி சார்பாக இன்று திருச்சி தலைமை தபால் நிலையத்தில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் போஜராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பேச்சாளர் மணிகண்டன் கணேஷ் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து திருச்சி தலைமை தபால் நிலையம் முன்னால் சுமார் 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி கட்சியினர் கைகளை உயர்த்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் கூறியதாவது;-சட்டமன்றத்தில் கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் ஜெய்ஹிந்த் என்ற சொல்லை சொல்லாமல் தங்களின் உரையை முடித்து உள்ளார். இது தமிழை முழுமுதலாகக் கொண்டு உள்ள எங்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. ஆகவே இந்து முன்னணி இதனை வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் கையில் வைத்திருந்த மனுக்களை தபால் பெட்டியில் போட்டு விட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published.