திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் முருங்கை கிராம ஊராட்சி மன்ற தலைவர் புனிதா விஜய் சேகர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் புகார் மனு அளித்தார்.

அம்மனுவில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நான் ஊராட்சி தலைவராக பணியாற்றி வருகிறேன். நான் திறம்பட செயல்பட்டு பல பணிகளை செய்து வருகிறேன். ஆனால் திமுக கட்சியை சேர்ந்த துணைத்தலைவர் கருப்பையா தொடர்ந்து பணிகளை தடுத்து வருகிறார். மேலும் 16 சிற்றூர்களை கொண்ட எங்கள் ஊராட்சியில் குடிநீர் தடைப்பட்டுள்ளது. மேலும் ஒரு வருட காலமாக துணைத் தலைவர் தீர்மானத்திலும், பண பரிவர்த்தனையிலும், கையெழுத்திடாமல் ஊராட்சி நிர்வாகத்தை பணி செய்ய விடாமல் தடை செய்து வருகிறார்.

நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் என்பதால் எனக்கு துணைத் தலைவர் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை மேலும் என்னை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து தூக்கி காட்டுகிறேன் எனவும், மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்து வருகிறார். இது தொடர்பாக பலமுறை உயர் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களுடன் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடத்தில் மனு அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *