திருச்சி சமஸ்பிரான் தெருவை சேர்ந்தவர் சௌமியா நாராயணன் வயது 41 இவர் சின்ன செட்டி தெரு பகுதியில் உள்ள தனது கடையின் முன்பு கடந்த 14ம் தேதி தனது இருசக்கர வாகனமான டிவிஎஸ் எக்ஸ் எல் 100 வண்டியை அன்று இரவு நிறுத்திவிட்டு வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் மீண்டும் 16ஆம் தேதி வெளியூரிலிருந்து தனது கடைக்கு வந்த செளமியா நாராயணனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பூட்டிவிட்டு சென்ற தனது இரு சக்கர வாகனம் திருடு போனது குறித்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது கடந்த 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இரவு மூன்று மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தை இரண்டு வாலிபர்கள் திருடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. உடனடியாக இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற வாலிபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக வாலிபர்கள் இருசக்கர வாகனத் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மக்களே உஷார்…

இனி வரும் காலங்களில் பொதுமக்கள் தங்களின் இருசக்கர வாகனத்தை சைடு லாக் செய்து பூட்டினாலூம், கூடுதலாக சங்கிலியால் இருசக்கர வாகனங்களை பூட்டி வைப்பது பாதுகாப்பானதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்