தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஜி கே மூப்பனார் அவர்களின் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பாக ஜி.கே மூப்பனாரின் ப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்விற்கு மாநகர் மாவட்ட தலைவர் இன்டர்நெட் ரவி தலைமை தாங்கினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ் வடக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தெற்கு மாவட்ட தலைவர் குணா மாநில செயலாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *