ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அங்கன்வாடி மையத்தில்

“ஆரோக்கியமான வாழ்கை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்” என்ற தலைப்பில் ஊட்டச்சத்து மாத விழா துவங்கியது. இந்நிகழ்ச்சியினை திமுக மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்..

இந்நிகழ்ச்சியில், முன்மாதிரி ஆரோக்கிய ஊட்டச்சத்து தோட்டம் மற்றும் ஊட்டச்சத்து உணவு தொடர்பான, கண்காட்சி நடைபெற்றது, மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது,

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் விழிப்புணர்வையும் இந்நிகழ்ச்சி மூலம் ஏற்படுத்தினர், இதில் கலந்துகொண்ட அனைவரும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

பின்னர் அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு “ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒருங்கிணைந்து பயணபடுவோம்” என்ற உறுதிமொழியோடு திருச்சி எடமலைப்பட்டிபுதூர் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்…

 

 

Leave a Reply

Your email address will not be published.