திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் இன்று (20.8.2022) முதல் வருகின்ற அக்டோபர் 1 ஆம் தேதி வரை சிறப்பு சுகாதார முகாமான “நம்ம ஊரு சூப்பரு” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம் தொட்டியபட்டி ஊராட்சியில் பேருந்து நிறுத்தம் சுத்தம் செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர். முதற்கட்டமாக, ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 2 வரை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளுதல், ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 2 வரை திட, திரவக் கழிவு மேலாண்மை தொடர்பாக அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.‌செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 16 வரை அனைத்து வீடுகளிலும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 23 வரை ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி தடை செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1 வரை பசுமைக் கிராமம் மற்றும் முழு சுகாதார கிராமமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *