திருச்சியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது இந்த கனமழையால் திருச்சி மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறு போல் வழிந்தோடுகிறது. இந்நிலையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலக வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த அரசமரம் நேற்று இரவு பெய்த கனமழையால் நிலைகுலைந்து வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் கோட்ட அலுவலக காம்பவுண்ட் சுவர் மற்றும் மார்க்கெட் செல்லும் தெருவை மறைத்தபடி எதிரே உள்ள வீட்டின் மீது விழுந்ததில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடம் வந்த ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.முன்னதாக இந்த மரம் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பம் முறிந்து மின்சார ஒயர்கள் அறுந்து சாலையில் விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு முதல் தற்போது வரை அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மின் ஊழியர்களும் உடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை வைத்து மின் வினியோகத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்