திருச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தபட்டு கழிவு செய்யப்பட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 5 வாகனங்கள் தற்போது உள்ள நிலையிலேயே பொது ஏலம் மூலம் விடப்படுகிறது . வருகின்ற 26.09.2022 காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது . ஏலம் எடுக்க விரும்புவோர் 25.09.2022 ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம் .

மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 26/09/2022 காலை 7 மணி முதல் 10 மணி வரை தங்களது ஆதார் அட்டையுடன் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 1000 / – மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 5000 / – முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டும் .

ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி ( இரு சக்கர வாகனத்திற்கு 12 % மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 % ) முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் . ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நிச்சயமாக கொரணா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் . என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *