இந்தியாவில் ரயில்வே உற்பத்தியில் ரயில் லோக்கோ தயாரிக்க தனியார் பயன்படுத்துவதை கண்டித்து திருச்சி பொன்மலை பணிமனை முன்பு மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தை கண்டித்தும் ரயில்வே உற்பத்தி பணிமனையை பாதுகாக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்.ஆர்.எம்.யூ துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ரயில்வேயில் தனியார் அனுமதிக்க கூடாது, லோகோ உற்பத்தியில் தனியாருக்கு தாரை வைக்கக்கூடாது, வந்தே பாரத் T18 தயாரிக்கும் ICF, MCF லத்தூரில் தனியார் அனுமதிக்கும் முடிவை உடனடியாக ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும், உற்பத்தி பணி மணிகளை தனியார் மயம் பெரம்பூர் கேரேஜ், பெரம்பூர் லோகோ பொன்மலை உள்ளிட்ட பணிமனைகளை தனியார் பணிகளை வழங்கினால் தனியார் ஆபத்துக்கு வழிவகுக்கும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள், அமைப்பினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பேட்டியளித்த எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கம் துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் கூறுகையில்:-

தொடர்ந்து மத்திய அரசு ரயில்வே துறையை தனியாருக்கு தரை வார்ப்பதை நிறுத்த வேண்டும் எப்படி விமானத்துறை விமானம் இல்லாத ஒரு இந்தியாவாக இருக்கிறதே அதேபோல ரயில்வே துறையை மாற்ற முயற்சி இருப்பது கண்டிக்கத்தக்கது. இதனை கண்டித்து விரைவில் இந்தியா முழுவதும் ரயில் நிறுத்த போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *