திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான நலத்திட்ட உதவிகள், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டி,அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வருகிற 29-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் வருகை தர உள்ளதை அடுத்து அதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அமைச்சர்கள் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பொய்யா மொழி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்மா சுப்பிரமணியன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்..

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் திருச்சி கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே என் சேகரன் வண்ணை அரங்கநாதன் சபியூல்லா அவைத் தலைவர் கோவிந்தராஜன் மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன் லீலாவேலு மூக்கன் மாவட்டக் கழகப் பொருளாளர் குணசேகரன் துணை மேயர் திவ்யா ஆகியோர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *