அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை எழுந்த நிலையில், முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரு அணிகளாகப் பிரிந்தனர். இதில் எடப்பாடி பழனிச்சாமி கை ஓங்கியதுடன் கடந்த ஜுன் 23ம்தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 11ம்தேதி நீதிமன்ற தீர்ப்பு மற்றும் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளின் ஆதரவுடன் அதிமுக நிரந்தர பொதுச் செயலாளரான ஜெயலலிதா அவர்கள் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே அதிமுக தலைமைக் கழகத்திற்குள் ஓபிஎஸ் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததால் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமும் ஏற்பட்டது, இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக தலைமைக் கழகத்திற்கு வருவாய் துறையினரால் சீல்வைக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்டதற்காக முன்னாள் எம்.பியும், மாவட்ட செயலாளருமான ப.குமாரின் ஆதரவாளர் ஒட்டிய  போஸ்டர்களில் எடப்பாடி பழனிச்சாமி படம் கிழிக்கப்பட்டும், எடப்பாடியின் படத்திற்கு சாணி அடிக்கப்பட்டும் காணப்பட்டது. இது அரசியல கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *