திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ச. கண்ணனூர் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணாநகர்,மாணிக்கபுரம்,நரசிங்கமங்கலம்,எஸ். கல்லுக்குடி பகுதிகளில் புள்ளம்பாடி மற்றும் பெருவளை வாய்க்கால் ரூபாய் 9.20 கோடி மதிப்பில் புதிய பாலங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.இந்த பூமி பூஜையை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் பூஜையை தொடங்கி வைத்தார்.

 நரசிங்கமங்கலம்,இனாம் சமயபுரத்தை இணைக்க புள்ளம்பாடி வாய்க்காலில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றனர்.50 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பாலம் வலுவிழந்தது. புள்ளம்பாடி வாய்க்காலில் புதிய பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதேபோல் அண்ணாநகர், மாணிக்கபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள பாலங்கள் வலுவிழந்த்தால் புதிய பாலம் கட்டுவதற்காக ச.கண்ணனூர் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக நபார்டு வங்கி திட்ட நிதியின் கீழ் ரூ. 9.20 கோடி மதிப்பில் புள்ளம்பாடி,பெருவளை வாய்க்காலில் 5 புதிய பாலங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

இந்நிகழ்வில் ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அலுவலக பணியாளர்கள், திமுக நிர்வாகிகள்,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *