திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இன்று விடியற்காலை திடீரென அடைமழை பெய்து திருச்சி மாவட்டத்தை குளிர செய்துள்ளது.

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை பெய்த நிலவரம் சமயபுரம் பகுதியில் 36.20mm மழையும், மண்ணச்சநல்லூர் பகுதியில் 32.00mm மழையும், ஸ்ரீரங்கம் பகுதியில் 07.02mm மழையும், துறையூர் பகுதியில் 03.00mm மழையும்,

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் 47.20mm மழையும், திருச்சி ஏர்போர்ட் பகுதியில் 28.20mm மழையும், குறிப்பாக திருச்சி ஜங்சன் பகுதியில் நேற்று இரவு அதிகபடியாக 15.16mm கனமழை பெய்தது.

இதனால் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி காட்சியளித்தது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *