திருச்சி மாநகராட்சி தேர்தலில் 59-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் அமுதா என்கிற ஆனந்தநாயகி ரோலர் வண்டி சின்னத்தில் கல்லுக்குழி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது அவர் கல்லுக்குழி கள்ளர் தெரு பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக உறுதி கூறினார். மேலும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உள்ள பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதேபோன்று திருச்சி பெரிய மிளகுபாறை 54 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் அன்வர் சாதத் முகம் பார்க்கும் கண்ணாடி சின்னத்தில் பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் தான் சின்னமான முகம் பார்க்கும் கண்ணாடிகளை சைக்கிள் முழுவதும் மாட்டிக் கொண்டு நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Leave a Reply

Your email address will not be published.