திருச்சி அருகே மருதண்டகுறிச்சி சந்தோஷ நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி 53 வயதான பாலாம்பாள் இவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்குவதற்காக தோழி மகாலட்சுமி அணுகியுள்ளார். அவர் நாமக்கல் மாவட்டம் முல்லை நகரைச் சேர்ந்த மாணிக்கம் மகன் 44 வது லோகேஷ் என்பவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது லோகேஷ் தான் கோவை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும் பாலாவிற்கு அரசு வேலை வாங்கித் தருவதற்கு ரூபாய் 16 லட்சத்து 50 ஆயிரம் பேசப்பட்டு பல்வேறு தவனைகளில் ரூபாய் 14 லட்சம் வரை பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் போலி ஆவணத்தை கொடுத்துள்ளார். அந்த ஆவணம் போலியானது தெரிய வந்ததும் பாலாம்பாள் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் மீதமுள்ள ரூ 2.5 லட்சம் பணத்தை பாலாம்பாளிடம் லோகேஷ் கேட்டுள்ளார். இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.பின்னர் கொள்ளிடம் போலீசார் அறிவுரையின் படி மீதி பணத்தை வாங்குவதற்க்காக நம்பர் 1 டோல்கேட் உத்தமர் கோயில் மேம்பாலத்திற்கு லோகேஸை பாலாம்பாள் வரவரைத்துள்ளார். அங்கு வந்த லோகேஸை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் லோகேஸ் சேலம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையில் அரசு பணியில் இருந்தும் இதுபோன்று பல்வேறு நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததால் கடந்த 2018 ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். என்பதும் அரசு வேலை வாங்கி தருவதாக பொய்யான தகவலை கூறி பண மோசடி செய்துள்ளார் என்பது தெரியவந்தது. பின்னர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் லோகேஸை கைது செய்து ஸ்ரீரங்கம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மணப்பாறை கிளைச்சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *